Wednesday, 18 February 2026

8th Science Master Guide - Units 1-5

8-ஆம் வகுப்பு அறிவியல் (அலகு 1 - 5)

வினா - விடைத் தொகுப்பு | Q & A Collection

P.U.M.S காப்பரத்தாம்பட்டி

அலகு 1: அளவீட்டியல் | Unit 1: Measurement
1. தளக்கோணம் - வரையறு. | Define Plane Angle.
இரண்டு நேர்க்கோடுகள் அல்லது இரண்டு தளங்கள் வெட்டிக்கொள்வதால் உருவாகும் கோணம் தளக்கோணம் எனப்படும். இதன் அலகு ரேடியன்.
Angle made at the intersection of two straight lines or two planes is called plane angle. Its unit is radian.
2. ஒளிச்செறிவு என்றால் என்ன? | What is Luminous Intensity?
ஒளி மூலத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட திசையில் ஓரலகு திண்மக்கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு ஒளிச்செறிவு எனப்படும். இதன் அலகு கேண்டிலா (cd).
The measure of the power of the emitted light by a light source in a particular direction per unit solid angle is called luminous intensity. Its unit is candela (cd).
அலகு 2: விசையும் அழுத்தமும் | Unit 2: Force and Pressure
1. அழுத்தம் - வரையறு. | Define Pressure.
ஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்துவிசை அழுத்தம் எனப்படும். அழுத்தம் = உந்துவிசை / பரப்பு.
Force acting perpendicularly on any given surface area of a body is known as pressure. Pressure = Force / Area.
2. வளிமண்டல அழுத்தம் என்றால் என்ன? | What is Atmospheric Pressure?
புவியைச் சுற்றியுள்ள காற்றுப் படலத்தினால் ஓரலகு பரப்பின் மீது கீழ்நோக்கிச் செயல்படும் விசை வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
The force exerted by the atmosphere on a unit area of the Earth's surface is called atmospheric pressure.
அலகு 3: ஒளி | Unit 3: Light
1. ஒளியின் எதிரொளிப்பு விதிகளைக் கூறுக. | State the laws of reflection.
படுகோணமும் எதிரொளிப்புக் கோணமும் சமம். படுகதிர், எதிரொளிப்புக் கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமையும்.
The angle of incidence is equal to the angle of reflection. The incident ray, the reflected ray, and the normal lie in the same plane.
2. குவிலென்ஸ் மற்றும் குழிலென்ஸ் வேறுபடுத்துக. | Differentiate convex and concave lens.
குவிலென்ஸ் மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் இருக்கும். குழிலென்ஸ் மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் இருக்கும்.
A convex lens is thicker in the middle than at the edges. A concave lens is thinner in the middle than at the edges.
அலகு 4: வெப்பம் | Unit 4: Heat
1. வெப்பம் - வரையறு. | Define Heat.
வெப்பம் என்பது ஒரு வகை ஆற்றல். இது அதிக வெப்பநிலையில் உள்ள பொருளிலிருந்து குறைந்த வெப்பநிலையில் உள்ள பொருளுக்குப் பாயும்.
Heat is a form of energy that flows from a body at a higher temperature to a body at a lower temperature.
2. வெப்பக் கடத்தல் என்றால் என்ன? | What is Conduction?
திண்மப் பொருள்களில் அணுக்களின் இயக்கமின்றி, அதிக வெப்பமுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பமுள்ள பகுதிக்கு வெப்பம் பரவுவது வெப்பக் கடத்தல் எனப்படும்.
The process of heat transfer in solids from a region of higher temperature to lower temperature without the actual movement of atoms is called conduction.
அலகு 5: மின்னியல் | Unit 5: Electricity
1. மின்னோட்டம் - வரையறு. | Define Electric Current.
மின்சுற்றில் பாயும் மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும். இதன் அலகு ஆம்பியர் (A).
The flow of electric charges through a conductor is called electric current. Its unit is Ampere (A).
2. மின்தடை என்றால் என்ன? | What is Resistance?
ஒரு கடத்தியின் வழியாக மின்னோட்டம் பாய்வதைத் தடுக்கும் பண்பு மின்தடை எனப்படும். இதன் அலகு ஓம் (Ω).
The property of a material to oppose the flow of electric current through it is called resistance. Its unit is Ohm (Ω).

No comments:

Post a Comment