Wednesday, 18 February 2026

8th Science Master Guide - Units 6-10

8-ஆம் வகுப்பு அறிவியல் (அலகு 6 - 10)

வினா - விடைத் தொகுப்பு | Q & A Collection

P.U.M.S காப்பரத்தாம்பட்டி

அலகு 6: ஒலி | Unit 6: Sound
1. அதிர்வெண் - வரையறு. | Define Frequency.
ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும். இதன் அலகு ஹெர்ட்ஸ் (Hz).
The number of vibrations produced by a vibrating body in one second is called frequency. Its unit is Hertz (Hz).
2. மீயொலி என்றால் என்ன? | What is Ultrasonic Sound?
20,000 ஹெர்ட்ஸ்க்கும் அதிக அதிர்வெண் கொண்ட ஒலி மீயொலி எனப்படும். இதை மனிதர்களால் கேட்க முடியாது.
Sound with a frequency greater than 20,000 Hz is called ultrasonic sound. Humans cannot hear this sound.
அலகு 7: காந்தவியல் | Unit 7: Magnetism
1. காந்தப்புலம் - வரையறு. | Define Magnetic Field.
ஒரு காந்தத்தைச் சுற்றி எந்தப் பகுதியில் அதன் காந்த விசையை உணர முடியுமோ, அந்தப் பகுதியே காந்தப்புலம் எனப்படும்.
The region around a magnet where its magnetic force can be felt is called a magnetic field.
2. காந்த விசைக்கோடுகளின் பண்புகள் யாவை? | Properties of magnetic field lines?
இவை மூடிய தொடர்ச்சியான வளைகோடுகள். இவை வடதுருவத்தில் தொடங்கி தென்துருவத்தில் முடிவடையும். இவை ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாது.
They are continuous closed curves. They start from the North pole and end at the South pole. They never intersect each other.
அலகு 8: அண்டம் மற்றும் விண்வெளி அறிவியல் | Unit 8: Universe and Space Science
1. விண்மீன் மண்டலம் என்றால் என்ன? | What is a Constellation?
வானில் ஒரு குறிப்பிட்ட வடிவம் கொண்ட விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் மண்டலம் எனப்படும்.
A group of stars forming a recognizable pattern in the night sky is called a constellation.
2. ராக்கெட்டில் பயன்படும் எரிபொருள்கள் யாவை? | Propellants in rockets?
திரவ ஹைட்ரஜன், ஹைட்ரசீன் போன்ற திரவ எரிபொருள்களும், பாலியூரித்தேன் போன்ற திண்ம எரிபொருள்களும் பயன்படுத்தப்படுகின்றன.
Liquid propellants like liquid hydrogen, hydrazine and solid propellants like polyurethane are used.
அலகு 9: நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | Unit 9: Matter Around Us
1. சேர்மம் - வரையறு. | Define Compound.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து உருவாவது சேர்மம் ஆகும்.
A substance formed when two or more elements combine chemically in a fixed ratio by mass is called a compound.
2. வேதியியல் வாய்ப்பாடு என்றால் என்ன? | What is a chemical formula?
ஒரு சேர்மத்திலுள்ள அணுக்களின் எண்ணிக்கையைக் குறியீடுகள் மூலம் குறிப்பதே வேதியியல் வாய்ப்பாடு ஆகும்.
A symbolic representation of the number of atoms of each element present in a molecule of a compound is called a chemical formula.
அலகு 10: நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | Unit 10: Changes Around Us
1. வேதிமாற்றம் - வரையறு. | Define Chemical Change.
ஒரு பொருள் புதிய பொருளாக மாறும் மீளாத் தன்மை கொண்ட மாற்றம் வேதிமாற்றம் எனப்படும்.
A permanent change in which a substance is transformed into a new substance with different properties is called a chemical change.
2. வினைவேக மாற்றி என்றால் என்ன? | What is a Catalyst?
ஒரு வேதிவினையில் கலந்து கொள்ளாமல் வினையின் வேகத்தை மட்டும் மாற்றும் வேதிப்பொருள் வினைவேக மாற்றி எனப்படும்.
A substance which alters the rate of a chemical reaction without undergoing any change in itself is called a catalyst.

No comments:

Post a Comment