அணு எண், இணைதிறன் மற்றும் வேதி விதிகள்
இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
🛡️ அணுக்கரு மற்றும் அடிப்படைத் துகள்கள்
- நியூக்ளியான்கள்: உட்கருவில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்.
- யுகாவா விசை: புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் உட்கருவில் இணைக்கும் வலிமையான விசை.
- அணு எண் (Z): புரோட்டான்களின் எண்ணிக்கை அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
- நிறை எண் (A): புரோட்டான் + நியூட்ரான் எண்ணிக்கை.
- நியூட்ரான்கள் (n): n = A - Z.
🌀 ஐசோடோப்புகள், ஐசோபார்கள் & ஐசோடோன்கள்
- ஐசோடோப்புகள்: ஒரே அணு எண், வேறுபட்ட நிறை எண். (எ.கா: ஹைட்ரஜன் - புரோட்டியம், டியூட்டிரியம், டிரிட்டியம்).
- ஐசோபார்கள்: ஒத்த நிறை எண், வேறுபட்ட அணு எண். (எ.கா: ஆர்கான், கால்சியம் - 40).
- ஐசோடோன்கள்: ஒத்த நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட வெவ்வேறு தனிமங்கள்.
🔗 இணைதிறன் (Valency)
ஓர் அணு மற்றொரு அணுவுடன் இணையக்கூடிய திறன் இணைதிறன் ஆகும்.
- உலோகங்கள்: வெளிக்கூட்டில் 1, 2, 3 எலக்ட்ரான்களைக் கொண்டவை.
- அலோகங்கள்: வெளிக்கூட்டில் 4, 5, 6, 7 எலக்ட்ரான்களைக் கொண்டவை.
- மந்த வாயுக்கள்: நிலைத்த எலக்ட்ரான் அமைப்பு கொண்டவை (இணைதிறன் = 0).
- மாறும் இணைதிறன்: குறைந்த இணைதிறனுக்கு '-அஸ்' (எ.கா. பெர்ரஸ்) என்றும், அதிக இணைதிறனுக்கு '-இக்' (எ.கா. பெர்ரிக்) என்றும் பெயரிடப்படும்.
📜 வேதிச்சேர்க்கை விதிகள்
| விதி | கண்டறிந்தவர் | ஆண்டு |
|---|---|---|
| நிறை மாறா விதி | லவாய்சியர் | 1774 |
| மாறா விகித விதி | பிரௌஸ்ட் | 1779 |
| பெருக்கல் விகித விதி | ஜான் டால்டன் | 1804 |
| தலைகீழ் விகித விதி | ஜெர்மியஸ் ரிச்சர் | 1792 |
| பருமன் இணைப்பு விதி | கேலூசாக் | - |
மதிப்பெண்: 0 / 25
வெற்றிச் சான்றிதழ்
அணு எண் மற்றும் இணைதிறன் தேர்வில் சிறப்பாகப் பங்கேற்றமைக்காக வழங்கப்படுகிறது.
மாணவர் பெயர்
மதிப்பெண்: / 25
CURIEYASITY DIGITAL
No comments:
Post a Comment