Thursday, 19 March 2026

கல்வி உளவியல் UT1&2

Psychology Study Page | இரா.செந்தில்குமார்

கல்வி உளவியல் - கற்பித்தல் குறிப்புகள்

இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி

UNIT - 1 உளவியல் அறிமுகம்

உளவியல்: "நடத்தையைப் பற்றி அறிதல் மற்றும் ஆராய்தலே உளவியல்" ஆகும். இதன் மறுபெயர் மனவியல்.

  • Psychology: என்ற வார்த்தையை 1590-ல் உருவாக்கியவர் ருடால்ப் ஹோக்கல்.
  • Psyche: உயிர் / ஆன்மா / உள்ளம் என்று பொருள்.
  • Logus: அறிவியல் / ஆராய்தல் என்று பொருள்.

உளவியலின் இலக்குகள்:

மனித நடத்தையை விவரித்தல், விளக்குதல், முன்கூட்டியே கணித்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் மாற்றியமைத்தல்.

  • வில்ஹெம் உண்ட்: 1879-ல் ஜெர்மனியில் முதல் உளவியல் ஆய்வகத்தை அமைத்தார். இவரே உளவியலின் தந்தை எனப்படுகிறார்.
  • வில்லியம் மக்டூகல்: 1908-ல் "Introduction to Social Psychology" நூலை எழுதினார். இவர் ஹார்மிக் கொள்கையை வழங்கியவர்.

உளவியல் கோட்பாடுகளும் அறிஞர்களும்

கோட்பாடுஅறிஞர்கள்
ஹார்மிக் கொள்கைவில்லியம் மக்டூகல்
வடிவமைப்புக் கொள்கைடிட்ச்னர்
முழுமைக் காட்சிக் கோட்பாடு (Gestalt)மாக்ஸ் வெர்திமர் (1912)
உளப்பகுப்பாய்வு (Psychoanalysis)சிக்மண்ட் ப்ராய்டு (நவீன உளவியலின் தந்தை)
தனிநபர் உளவியல்ஆட்லர்
பகுப்பு உளவியல்கார்ல் யுங்
மனிதநேய உளவியல்கார்ல் ரோஜர்ஸ் & மாஸ்லோ
நடத்தை உளவியல்J.B. வாட்சன்

கல்வி உளவியலின் உட்கூறுகள்

கோலெஸ்விக்: கற்றல் கற்பித்தலை மேம்படுத்த உளவியல் விதிகளைப் புகுத்துவதே கல்வி உளவியல்.

லிண்ட்கிரேன் கூறும் 5 முக்கியக் கூறுகள்:

  1. கற்பவர் (மாணாக்கர்)
  2. கற்கும் முறைகள்
  3. கற்கும் அனுபவங்கள்
  4. கற்கும் சூழ்நிலைகள்
  5. ஆசிரியர்

மாணவர் நிலைகள்: மீத்திறன் மிக்கவர்கள், சராசரி மாணவர்கள் மற்றும் மெதுவாகக் கற்பவர்கள்.

UNIT - 2 மரபும் சூழ்நிலையும்

  • மரபு (Nature): பிறப்பின் போது பெற்றோரிடமிருந்து பெறும் உடற்கூறு பண்புகள்.
  • சூழ்நிலை (Environment): பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவனைச் சுற்றியிருக்கும் தூண்டல்களின் தொகுப்பு.
  • முக்கியக் குறிப்பு: மரபும் சூழ்நிலையும் இணைந்தே மனித வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.
  • குரோமோசோம்கள்: பெண்ணிடம் 23 சோடி "x" வகையும், ஆணிடம் 23-வது சோடியில் "x, y" வகையும் உள்ளன.

இரட்டையர்கள்:

இருகரு இரட்டையர்கள்: இரு சினை முட்டைகளால் உருவாவர். மரபு ஒரே மாதிரி இருக்காது.

ஒருகரு இரட்டையர்கள்: ஒரு சினை முட்டை பிளந்து உருவாவர். இவர்களின் மரபு முற்றிலும் சமமாக இருக்கும்.

வளர்ச்சி, முன்னேற்றம் & முதிர்ச்சி

  • வளர்ச்சி: உருவ அளவும் எடையும் அதிகரிப்பது. இது முதிர்ச்சிக்குப்பின் நின்றுவிடும்.
  • முன்னேற்றம்: செயல்பாட்டுத் தரம் மேம்படுவது. இது வாழ்நாள் முழுவதும் தொடரும்.
  • முதிர்ச்சி: வளர்ச்சியின் பெரும் எல்லை. இது பயிற்சி அல்லது அனுபவத்தால் ஏற்படுவதில்லை.
  • கற்றல்: நடத்தையில் ஏற்படும் நிரந்தர மாற்றம். இது சூழ்நிலை அனுபவங்களால் விளைவது.

வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

1. உடல் வளர்ச்சி: எலும்பு மற்றும் உள் உறுப்புகளின் மாற்றம்.

2. மன வளர்ச்சி: கற்பனை, சிந்தனை, ஆராய்ந்தறிதல் மற்றும் நினைவுத் திறன் மேம்பாடு.

3. மனவெழுச்சி வளர்ச்சி: உணர்ச்சிகளைப் பொருத்தமான நேரத்தில் வெளிப்படுத்துவதும், கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ஆகும்.

4. சமூக வளர்ச்சி: சமூக விதிகளை மதித்தல் மற்றும் பிறருடன் பழகும் திறன்.

5. ஒழுக்க வளர்ச்சி: சரி, தவறு எனப் பிரித்தறியும் பண்பு.

CURIEYASITY DIGITAL

No comments:

Post a Comment