ஆளுமைக் கோட்பாடுகள் மற்றும் அளவிடுதல்
இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
ஆளுமைக் கோட்பாடுகள் மற்றும் வகைகள்
1. ஆக்பர்ன் குறிப்பிடும் ஆளுமை வகைகள் யாவை?
தன்னலக்காரன், புரட்சியாளன், தலைவன் மற்றும் தற்பெருமைக்காரன்.
2. கேட்டல் என்பவர் ஆளுமையின் எத்தனை முதன்மை பண்புக் கூறுகளைக் குறிப்பிட்டார்?
16 பண்புக் கூறுகள்.
3. மனிதர்களை அகமுகன், புறமுகன் என்று வகைப்படுத்தியவர் யார்?
கார்ல் யூங்.
4. ஆளுமையின் அடித்தளமாக அமைவது எது?
இட் (Id).
5. ஃப்ராய்டின் ஆளுமை வளர்ச்சியின் படிநிலைகள் எத்தனை?
ஐந்து.
6. உள இயக்கக் கோட்பாடு என்று அழைக்கப்படுவது எது?
ஃப்ராய்டின் ஆளுமை வகைப்பாடு.
7. புதிய ஃப்ராய்டியன் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் யார்?
யூங் மற்றும் ஆட்லர்.
8. தாழ்வுச் சிக்கல் (Inferiority Complex) எனும் கருத்தை உருவாக்கியவர் யார்?
ஆட்லர்.
ஆளுமையை அளவிடுதல்
9. கபால அளவையை (Phrenology) உருவாக்கியவர் யார்?
கால் (Gall).
10. முக அளவையை உருவாக்கியவர் யார்?
லாம்பரோஸோ.
11. ஆளுமையை அளவிடும் முறைகள் யாவை?
அகவய முறை மற்றும் புறத்தோற்று நுண்முறைகள்.
12. ஆளுமையை அளவிட முதன்முதலில் வினா வரிசையை தயாரித்தவர் யார்?
உட்வொர்த்.
13. பொருத்தப்பாடு பட்டியலை (Adjustment Inventory) உருவாக்கியவர் யார்?
பெல்.
14. பலவாளுமைப் பண்புகள் பற்றிய பட்டியல்களை (MMPI) உருவாக்கியவர்கள் யார்?
ஹாதவே மற்றும் மெக்கின்லே.
15. பல பண்புகளின் அளவுகளை தொகுத்து கூறும் வரைபடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஆளுமையின் படிமம் (Psychograph).
16. புறத்தோற்று நுண்முறைகளின் முக்கிய வகைகள் யாவை?
புலன்காட்சி நுண்முறை, உருவாக்கப்படும் நுண்முறை மற்றும் பொருளுரைக்கும் நுண்முறை.
17. ஹெர்மன் ரோர்ஷாக் தயாரித்த மைத்தடச் சோதனையில் எத்தனை அட்டைகள் உள்ளன?
10 அட்டைகள்.
18. பொருள் இணைத்தறி சோதனை (TAT) நடத்தியவர்கள் யார்?
முர்ரே மற்றும் மார்கன்.
19. தடையில்லா அல்லது கட்டுபாடற்ற இணைத்தறி சோதனையை உருவாக்கியவர்கள் யார்?
யூங் மற்றும் ரோஸனாப்.
நாட்டம், கவர்ச்சி, மனப்பான்மை
20. நாட்டத்திற்கு (Aptitude) வரையறை செய்தவர்கள் யார்?
பின்ஹாம் மற்றும் டிராக்ஸ்லர்.
21. குறிப்பிட்ட ஒரு தொழிலைக் கற்பதற்கு ஒருவனிடமுள்ள இயற்கைத் திறனை அளவிடுவதே நாட்டச் சோதனையாகும் என்று கூறியவர் யார்?
பின்ஹாம்.
22. இசை நாட்டச் சோதனையை உருவாக்கியவர் யார்?
சீஷோர்.
23. பல்நாட்டச் சோதனைகளில் அடங்குபவை எவை?
சொல் ஆய்வு மற்றும் கருத்தியல் ஆய்வு.
24. தொழிற் கவர்ச்சிப் பட்டியலை உருவாக்கியவர் யார்?
கூடர் (Kuder).
25. "அபிப்ராயம் என்பது ஒருவரது வார்த்தைகள் மூலம் வெளிப்படுகிறது" என்று கூறியவர் யார்?
தர்ஸ்டன்.
26. மனப்பான்மைக்கும் சார்பெண்ணத்திற்கும் உள்ள வேற்றுமையை குறிப்பிட்டவர் யார்?
ஸிம்சன்.
27. ஆல்போர்ட் மற்றும் ஸ்டேக்னர் கூற்றுப்படி மனப்பான்மை எத்தனை நிலைகளின் வழியாக உருவாகின்றது?
நான்கு நிலைகள்.
No comments:
Post a Comment