அணு அமைப்பு: ஒரு முழுமையான தொகுப்பு
இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
🔬 அணுக்கொள்கைகளின் பரிணாம வளர்ச்சி
- டால்டன் (1808): அணு என்பது கடினமான, பிளக்க இயலாத திண்மக்கோளம்.
- ஜே.ஜே. தாம்சன் (1904): அணுவை தர்பூசணி பழத்துடன் (பிளம் புட்டிங் மாதிரி) ஒப்பிட்டவர். எலக்ட்ரானைக் கண்டுபிடித்தார்.
- ரூதர்போர்டு (1911): தங்கத் தகடு சோதனை மூலம் அணுக்கருவைக் (Nucleus) கண்டுபிடித்தார். சூரிய குடும்ப அமைப்போடு ஒப்பிட்டார்.
- நீல்ஸ்போர் (1913): எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் (ஆர்பிட்) சுற்றி வருகின்றன எனக் கூறினார்.
- ஷிராடிங்கர் (1926): எலக்ட்ரான் கூட்டங்கள் பற்றிய அணு மாதிரியை வெளியிட்டார்.
⚛️ அணுவின் அடிப்படைத் துகள்கள்
- எலக்ட்ரான் (e⁻): கண்டுபிடித்தவர் ஜே.ஜே. தாம்சன். எதிர் மின்சுமை (-1).
- புரோட்டான் (p⁺): கண்டுபிடித்தவர் கோல்ட்ஸ்டீன். நேர் மின்சுமை (+1).
- நியூட்ரான் (n): கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் சாட்விக். மின்சுமையற்றது (0).
குறிப்பு: அணுவின் நிலைப்புத்தன்மையை விளக்கியவர் நீல்ஸ்போர். அணுக்கருவின் அளவை விளக்கியவர் ரூதர்போர்டு.
மதிப்பெண்: 0 / 25
வெற்றிச் சான்றிதழ்
அணு அமைப்பு (Atomic Structure) தேர்வில் சிறப்பாகப் பங்கேற்றமைக்காக வழங்கப்படுகிறது.
மாணவர் பெயர்
மதிப்பெண்: / 25
CURIEYASITY DIGITAL
No comments:
Post a Comment