இன்றைய சிந்தனை..( 19.05.2020)
...........................................
‘’ சோதனைகளை கடந்தால்தான்’’..
....................................
பலவித சோதனைகளை கடந்தால்தான் சாதனையை அடைய முடியும்.
சோதனைகளில் சோர்வடையாமல், விரக்தி அடையாமல், தோல்வியில் மனம் உடைந்து போகாமல் சாதனைகள் புரிய முயற்சி செய்ய வேண்டும்.
சாதனை புரிபவர்களுக்கு நம்முடைய செயல்களை பிறர்க்கு நாம் எப்படிப்பட்டவர் என்பதை பிறர்க்கு உணர்த்தவேண்டும்.
அது மட்டும் அல்ல., சீரிய எண்ணங்களை செயல்படுத்தும் போது அவை சிறந்த செயல்கள் ஆகின்றனவா? என்பதை அறிந்தபின் செயலாற்ற வேண்டும். சாதனை புரிய இதுவும் ஒரு வழியாகும்.
நீண்ட தூரம் ஓடி வந்தால்தான் உயரம் தாண்ட முடியும் என்பதை நாம் அறிந்து இருக்கிறோம்.
படிக்கும் நூல்கள் மூலம், சந்திக்கும் மனிதர்கள் மூலம் சாதனை புரிய வழி இருக்கிறதா? என்று பார்ப்பது ஒவ்வொரவரின் கடமை.
வாழ்வில் வரும் சோதனைகளில் இருந்து மீள ஒருவர் வழி தேடினார்..அவர் ஒரு அறிஞரை சந்தித்து கேட்டார்.
அதற்கு அவர் குதிரைப் பந்தயத்திற்கு செல்லுங்கள்..ஆனால் பணம் கட்டாதீர்கள்.. பந்தயம் மட்டும் பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
.
மாலை திரும்பியதும் அதற்கு அவர் விளக்கம் சொன்னார்..
’’பந்தயக் குதிரைக்கு நான் ஏன் ஓடுகின்றோம் என்று தெரியாது.ஆனால் முதுகில் அடி விழும்போதெல்லாம் இன்னும் வேகமாக ஓடுகிறது..இலக்கை சென்று சேர்கிறது..
குதிரைக்கே இந்த புரிந்தால் இருந்தால், குறிக்கோள் கொண்ட மனிதனுக்கு இருக்க வேண்டாமா? என்றார்.
’’சோதனைகளில்தான் சாதனை’’ என்பதை இப்படி விளக்கினார் அந்த அறிஞர்..
ஆம்.,நண்பர்களே..
சாதனை புரிவதற்கு முன் வரும் சோதனைகளை பயிற்சியாக ஏற்றுக் கொண்டால்தான் மிகப்பெரிய அளவில் சாதிக்க முடியும்..
எனவே இதை மனதில் கொண்டு செயல் பட்டால் வெற்றி நிச்சயம்
No comments:
Post a Comment