மே-06. கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கிய
வேதியியல் அறிஞர்- பிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு (Francos
Auguste Victor Grignard) பிறந்த தினம்.
பிரான்ஸின் செர்போர்க் நகரில்
மே-06,
1871 ஆம் ஆண்டு பிறந்தார். தான் பிறந்த ஊரில் உள்ள
பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், உதவித்தொகை பெற்று, எகோலே நார்மலே சிறப்பு பள்ளியில்
பயின்றார். பிறகு லியோனில் படிப்பைத் தொடர்ந்து, பட்டம்
பெற்று,அதே பல்கலைக்கழகத்தில் உதவி ஆய்வு விஞ்ஞானியாக
சேர்ந்தார்.
#ஆய்வுகள்:-
கரிம வேதியியலின் தந்தை எனக்
கருதப்படும் பிரபல விஞ்ஞானி பிலிப் பார்பியரோடு இணைந்து
தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். செறிவூட்டப்படாத
ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவை தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டார்
இந்த ஆய்வு பின்னர் கரிமத்
தொகுப்புகள் (Organic
Synthesis) தொடர்பான ஆய்வுகள், கண்டுபிடிப்புகளில்
குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. மேலும், ஆர்கனோமெக்னீசியம்
கலவைகள் குறித்த இவரது கண்டுபிடிப்புகள், வேதியியலில் கரிமத்
தொகுப்பு என்ற பரந்த களத்தைத் திறந்துவிட்டது. ‘கிரிக்னார்டு
எதிர்வினை’ (Grignard Reaction) என இவரது பெயரில்
வழங்கப்படும் செயற்கை எதிர்வினையை 1900-ல் கண்டறிந்தார்.
இதற்காக, 1912-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு
இவருக்கும், இன்னொரு பிரெஞ்ச் விஞ்ஞானியான பால்
செபாட்டியருக்கும் இணைந்து வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் தயாரிக்க இவரது
கிரிக்னார்டு எதிர்வினை முக்கிய வழிமுறையாகப் பின்பற்றப்படுகிறது. ரசாயனத்
தாக்குதலுக்குப் பயன்படும் மஸ்டர்ட் எரிவாயுவைக் கண்டறிந்தார்.
மே-06, 1872.. வியாழன்
கோள் பற்றிய ஆய்வுக்கு புகழ்பெற்ற டச்சு கணிதவியலாளர், இயற்பியலாளர்,
வானியலாளர், வில்லெம் தெ சிட்டர் பிறந்த
தினம்.
வில்லெம் தெ சிட்டர் (Willem de Sitter) மே 6, 1872ல்
சுனீக்கில் பிறந்தார். இவர், கணிதவியலைக்
குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். குரோனிங்கன் வானியல் ஆய்வகத்தில் பிறகு
சேர்ந்தார்.
தென்னாப்பிரிக்கா, நன்னம்பிக்கை முனையில் உள்ள
அரசு வான்காணகத்தில் 1897 முதல் 1899 வரை
பணிபுரிந்தார். பின்னர், 1908ல் இலெய்டன் பல்கலைக்கழக
வானியல் கட்டிலில் பணியமர்த்தப்பட்டார்.
வில்லெம் டச்சு கிழக்கிந்தியாவாக
அன்று விளங்கிய இந்தோனேசியாவில் உள்ள இலெம்பாங்கில் அமைந்த போசுச்சா
வான்காணகத்தின் இயக்குநராக இருந்தார். இவர் இங்கே மெசியர் 4 எனும் பேரியல் விண்மீன்கொத்தை ஆய்வு செய்தார். 1912ல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின்
உறுப்பினர் ஆனார்.
ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம் (1929), புரூசு
பதக்கம்(1931), அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்(1931)
போன்ற பதக்கங்கள் பெற்றுள்ளார். நிலாக் குழிப்பள்ளம் தெ சிட்டர்
குறுங்கோள் 1686 தெ சிட்டர் என இவரது பெயர் இடப்பட்டள்ளது.
தொகுப்பு: tamilsciencenews.in


No comments:
Post a Comment