Saturday, 16 May 2020

தினம் ஒரு சிந்தனை



*இன்றைய சிந்தனை.( 16.05.2020)

……………………………………………..........

"சோம்பலை விரட்டுவோம்.."

.......................................................

நம் முன் பரந்து கிடக்கும் வாய்ப்புகளையும், வசதிகளையும் மிகச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறச் செய்யாமல் சோம்பேறியாக நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என எண்ணி மூலையில் முடங்கிப்போய் விடுகினறோம்...

சோம்பேறியை அழைத்து “என்னப்பா, படித்து விட்டாயே! இப்பொழுது  என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டால் சும்மாதான் இருக்கிறேன்” என்பான்...

“சும்மா” என்ற வார்த்தை தமிழ் இல்லை. சோம்பேறிகள் தோற்றுவித்த மொழி  இது, அவர்களுக்கு மட்டுமே சொந்தம்...

உற்சாகமுடையவர்கள் இவ் வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்...

சோம்பேறித்தனத்திற்கு சிலர் வறுமையைக் காரணம் காட்டுவார்கள்...

அப்படி காரணம் காட்டுபவர்களும் சிந்திக்கத் தெரியாத சோம்பேறிகளே...!

சோம்பல்தான் சுறுசுறுப்பின் எதிரி !, சோம்பல் மிக்கவர்கள் படுக்கையை விட்டு மட்டுமல்லாமல், உட்கார்ந்து விட்டால் இருக்கையை விட்டும் எளிதாக எழுந்திருக்க மாட்டார்கள்...

சோம்பல் மிக்கவர்கள் தானும் சலித்துக்கொள்வார்கள்; மற்றவர்களையும் சலிப்பூட்டுவார்கள். இவ்வாறு இந்த சோம்பலைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்...

இவர்கள் சிரங்குகளை சொறிந்து புண்களை உண்டாக்குபவர்கள்.

வாழ்வின் பாதையில் முள்வேலியாய் நிற்பது சோம்பலே.,முதலில் சோம்பலை விரட்டுங்கள்...

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்...

அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார்...

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித்தாவி ஏறியது...

அதைப் பார்த்த ஒரு மனிதன், "மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டு இருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்...

அதற்கு அந்தப் பறவை,

"மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது...

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது...

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு,

அந்த மனிதனைப் பார்த்து,"மனிதனே, நீயும் தேடு...
மரத்திலும், மண்ணிலும்,நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான்,..

"நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு.உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்...

''சோர்வு'' என்பதிலுள்ள முதல் எழுத்தை மாற்றினாலேயே நமக்கு பிறந்து விடும் ''தீர்வு''...

சோம்பல் மிக்கவர்கள் வாழ்க்கையில் இழப்பது எத்தனையோ! சுறுசுறுப்பானவர்கள் பெறுவது எவ்வளவோ!

ஆம் நண்பர்களே...!

*ஒருவன் அடையும் முன்னேற்றத்தை கெடுக்கும் முக்கியமான குணம் சோம்பல்தான். சோம்பலால் கால தாமதம் நேர்கிறது.கால தாமதத்தோடு மறதியும் சேர்ந்து கொள்கிறது...*

*எனவே.,சோம்பலை விரட்டி நாமும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மற்றவர்களையும் மகிழ்ச்சியாக அடைய வைப்போம்...*


No comments:

Post a Comment