மே-6. அமெரிக்க வேதியலாளர், ‘MRI ஸ்கேனிங் கருவியின் தந்தை’- பால் கிறிஸ்டியன் லாட்டர்பர் (Paul Christian Lauterbur) பிறந்த தினம்.
மே-6, 1929 இல்,
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் சிட்னி நகரில் பிறந்தார்.
இளம் வயதிலேயே அறிவியலில்
அதிக நாட்டம் கொண்டிருந்து, விஞ்ஞானியாக விரும்பினார்.
அறிவியல்
ஆராய்ச்சிகளில் இருந்த ஆர்வத்தை வேதியியல்
ஆசிரியர் அறிந்துகொண்டதால் வகுப்பு முடிந்தவுடன் தனியாக பரிசோதனைகள் மேற்கொள்ள
அனுமதித்தார்.
கிளீவ்லேண்டில் உள்ள கேஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்
வேதியியலில் பட்டம் பெற்றார். 1950-களில் கட்டாய
ராணுவச் சேவையில் சேர்ந்தபோது, அணுக்கரு காந்தப்புலம்
(என்எம்ஆர்) தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட இவரது உயரதிகாரிகள் அனுமதித்தனர்.
சில நிறுவனங்களின் ஆதரவுடன் என்எம்ஆர் கருவி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது பல்வேறு திட, திரவப் பொருள்களின் மூலக்கூறு கட்டமைப்புகள் தொடர்பான ஆய்வுகளில் முக்கிய கருவியாகப் பயன்பட்டது.
இரு பரிமாணங்கள் கொண்ட படங்களை
உருவாக்க இதை பயன்படுத்தலாம் என்பதை ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் 1970-ல் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பு காந்த
அதிர்வு அலை வரைவு (Magnetic Resonance Imaging)
கருவியை மேம்படுத்துவதற்கான
அடிப்படை ஆராய்ச்சியாக அமைந்தது.

No comments:
Post a Comment