Wednesday, 6 May 2020

தினம் ஒரு சிந்தனை


இன்றைய சிந்தனை..
.....................................
'' கோபம்தான்''..
..........................
கோபம்தான் அனைத்து நிகழ்வுகளுக்கும் மூலாதாரமாக உள்ளது.. கோபம் நமக்கு பிடிக்காதவைர் நடக்கும்போது ஏற்படுகிறது..
நமக்கு பிடிக்காதவற்றை மற்றவர்கள் செய்யும்போது, எழுதும்போது,சொல்லும்போது,கேட்கும்போது,
படிக்கும்போது நாம் நமது எதிர்ப்பை கோபமாக காண்பிக்கிறோம்..
நமது உணர்வுகளில் மிக மோசமான விளைவுகளை தரக்கூடியது கோபமே.. இந்த கோபம் மனிதருக்கு மட்டுமல்ல, ஏனைய உயிர் இடங்களுக்கும் உரித்தான ஒன்று..
சிலருக்கு பொய் சொன்னால் கோபம் வரும்.பொய் சொல்லி நம்மை ஏமாற்றியவர்களை கண்டால் கோபம் வரும்.
இன்னும் சிலருக்கு தொட்டதுக்கெல்லாம் கோபம் பொத்துக் கொண்டு வரும்..இப்படி பட்டபவர்களுக்கு நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும்... நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.. இரத்த கொதிப்பு ஏற்படும்..
இவர்களுக்கு மனம் எப்போதும் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருக்கும்.. அவர்களால் எந்த செயலையும் ஒழுங்காக செய்ய முடியாது..
சரிங்க..இந்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்தவது?
முதலில் குரங்கு மாதிரி அலைபாயும் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்தினால் கணப்பொழுதில் ஏற்படும் சின்னத்தை ஓரளவு கட்டுப் படுத்தலாம்..
எதுவாக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி பேசுங்கள்..
இதனால் கோபங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்..
சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாகப் பேசும்போது உண்மைத்தன்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.
அதை விடுத்து பிறர் சொன்னார்கள் என்பதற்காக பலருடன் பகைமையை வளர்த்து கொள்பவர்களும் உண்டு..முதலில் கோபம் ஏற்படுத்தக்கூடிய சூழலை தவிர்க்கவும்.. கோபம் ஏற்படுத்தக் கூடிய சிந்தனைகளை தவிர்க்கவும்..
ஆம்..நண்பர்களே..
பிறரை நேசித்து, அன்புகாட்டி, அலைபாயும் எண்ணங்களை ஒழுங்குபடுத்தி ,தூய சிந்தனையுடன் இருந்தால் அன்பு உள்ளங்கள் உங்களை தேடி வரும்.
'கோபம்' என்னும் அந்த கொடிய விலங்கினை நம் உள்ளத்தில் இருந்து விலக்கி,அனைத்து உயிர்கள் இடத்தில் அன்பு செலுத்தி வாழப் பழகிக் கொள்வோம்...

No comments:

Post a Comment