மருத்துவச்சிகள் நாள்! 05.05,2020
மருத்துவச்சியின்
சர்வதேச நாள் -இதே மே 5 அன்று கொண்டாடப்படுது. மருத்துவச்சி என்பவர்
பிரசவம் பார்ப்பவர், தாய் சேய் செவிலி, பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில்
அழைக்கப்படுகின்றனர்.
தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணி
புரிகின்றனர். இவர்களின் அறிவு, திறமை மற்றும்
சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல்இத்தினம் உலகில்
ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
கார்ல்மார்க்ஸ் பிறந்த நாள்
மே 5- கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு ( Karl
Heinrich Marx மே 5,1818 , செருமனி – மார்ச் 14ன்1883 லண்டன் ) ஜெர்மானியமெய்யிய்லாளராக
மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுநராக ,தலை சிறந்த ஆய்வறிஞ்ராக ,எழுத்தாளராக
,சிந்தனையாளராக ,புரட்சியாளராக கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.பல்வேறு துறைகளிலும்
ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்விகளும்
,கருத்துகளும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்த்து.
பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார்.
No comments:
Post a Comment