8 ஆம் வகுப்பு அறிவியல் - நுண்ணுயிரிகள்
இணைய வழி மாதிரி வினாடி-வினாத் தேர்வு
1. நுண்ணுயிரிகளைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு எது?
2. பாக்டீரியாக்கள் எவ்வகை உயிரினங்கள் ஆகும்?
3. அளவு மற்றும் வடிவத்தின் அடிப்படையில் பாக்டீரியாக்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
4. கோள வடிவத்தில் உள்ள பாக்டீரியாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
5. சுருள் வடிவத்தில் உள்ள பாக்டீரியாக்களுக்கு என்ன பெயர்?
6. கமா வடிவத்தில் உள்ள பாக்டீரியாக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
7. பாக்டீரியாக்கள் இடப்பெயர்ச்சி செய்வதற்குப் பயன்படும் உறுப்பு எது?
8. வைரஸ் என்ற லத்தீன் சொல்லின் பொருள் என்ன?
9. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றுள்ளவை எவை?
10. பூஞ்சைகளின் உடலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
11. பூஞ்சைகளைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு எது?
12. ஒருசெல் பூஞ்சைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எது?
13. ஆல்காக்கள் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு எது?
14. புரோட்டோசோவா என்ற சொல்லின் பொருள் என்ன?
15. போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் புரோட்டோசோவா உயிரினம் எது?
16. கசையிழை மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் புரோட்டோசோவா எது?
17. குறு இழை மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் புரோட்டோசோவா எது?
18. மலேரியா காய்ச்சலை உருவாக்கும் புரோட்டோசோவா ஒட்டுண்ணி எது?
19. முதல் உயிர் எதிர்பொருளான பெனிசிலினைக் கண்டறிந்தவர் யார்?
20. பெனிசிலின் மருந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
21. பெரியம்மைக்கான தடுப்பூசியைக் கண்டறிந்தவர் யார்?
22. பால் தயிராக மாறுவதற்குக் காரணமான பாக்டீரியா எது?
23. லெகுமினஸ் (பருப்பு வகை) தாவரங்களின் வேர் முண்டுகளில் வாழும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியா எது?
24. காலரா நோயை உருவாக்கும் நுண்ணுயிரி எது?
25. காசநோய் (டிபி) எந்த நுண்ணுயிரியால் ஏற்படுகிறது?
26. சாதாரண சளி எந்த வைரஸால் ஏற்படுகிறது?
27. ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய் எதனால் ஏற்படுகிறது?
28. ஆப்பிரிக்கத் தூக்க வியாதியை உருவாக்கும் நுண்ணுயிரி எது?
29. சிட்ரஸ் கேன்கர் என்ற எலுமிச்சை தாவர நோய் எதனால் ஏற்படுகிறது?
30. ரொட்டி மற்றும் கேக் தயாரிப்பில் மாவை உப்பச் செய்வதற்குப் பயன்படும் நுண்ணுயிரி எது?
தேர்வு நிறைவடைந்தது!
0 / 30
வாழ்த்துகள்! உங்களது டிஜிட்டல் சான்றிதழைப் பெற கீழே பெயரைப் பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment