Monday, 4 May 2026

MAT வேறுபட்ட ஜோடி எண்ணை தேர்ந்தெடு

ODD ONE OUT - ஜோடி எண்

தனித்த / வேறுபட்ட ஜோடி எண்ணைக் கண்டறிதல்

ODD ONE OUT - PAIR OF NUMBER

1. அறிமுகம் - Introduction
"தனித்த / வேறுபட்ட ஜோடி எண்களைக் கண்டறிதல்" - வகையில் நான்கு இணைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் மூன்று இணைகள் மட்டும், தங்களுக்குள் எளிய விதிகளின் மூலம் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு இணை மட்டும் அவற்றிலிருந்து மாறுபட்டு காணப்படும். அம்மாறுபட்ட இணையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொடர்புகள்: வர்க்கம், கனம், பகு/பகா எண்கள், ஒற்றை/இரட்டை, அடுக்குகள், மடங்குகள், பொது வகுத்திகள்
2. எடுத்துக்காட்டுகள் - Examples
எ.கா : 1
1) 2, 8 2) 7, 343 3) 10, 100 4) 4, 64
விளக்கம்: $2^3=8$, $7^3=343$, $4^3=64$ → கனங்கள்
$10^2=100$ → வர்க்கம்
∴ மாறுபட்ட இணை: 3) 10, 100
எ.கா : 2
1) 10, 30 2) 7, 9 3) 34, 51 4) 63, 108
விளக்கம்: 10,30 → பொது வகுத்தி 10
7,9 → பொது வகுத்தி இல்லை
34,51 → பொது வகுத்தி 17
63,108 → பொது வகுத்தி 9
∴ மாறுபட்ட இணை: 2) 7, 9

பயிற்சி வினாக்கள் : 1 - 40

4 இணைகளில் மாறுபட்ட இணையை தேர்ந்தெடு

No comments:

Post a Comment