Saturday, 4 April 2026

கல்வி உளவியல் 1

கல்வி உளவியல் - 1 | Study Guide & Quiz

கல்வி உளவியல் - 1

2023 TNTET அசல் வினாத்தாள் - அத்தியாயம் 1

இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி

பாடக் குறிப்புகள் (Study Notes)

  • வில்லியம் மெக்டூகல்: பதினான்கு மனவெழுச்சிகள் பதினான்கு இயல்பூக்கங்களுடன் இணைவு பெற்றிருக்கும் எனக் கூறியுள்ளார்.
  • வழிகாட்டல்: மாணவர்கள் சூழலுக்கேற்ப தன்னைத்தானே பொருத்தப்படுத்திக்கொள்ள உதவும் முறை தனிப்பட்ட வழிகாட்டல் எனப்படும்.
  • தார்ண்டைக்: நுண்ணறிவு என்பது உண்மையின் பார்வையின்படி சிறந்த துலங்கலுக்கான செயல் திறன் என வரையறுத்துள்ளார்.
  • ஆப்பிரஹாம் மாஸ்லோ: உளவியலில் தன்னிறைவு கோட்பாட்டை அளித்தவர் இவரே ஆவார்.
  • வளர்ச்சி: வளர்ச்சி என்பது கரு முதல் கல்லறை வரை நடைபெறும் ஒரு தொடர் செயல்முறையாகும்.
  • மூளைப்பொழிவு: குழுவின் கருத்து வெளிப்பாட்டை மதிப்பீடு இல்லாமல் வெளிப்படுத்தும் உத்தி மூளைப்பொழிவு ஆகும்.
  • பாவலோ சோதனை: பாவலோ தனது சோதனையில் செயற்கைத் தூண்டலாக மணியைப் பயன்படுத்தினார்.
  • குமரப்பருவம்: எரிக்சனின் கூற்றுப்படி குமரப்பருவம் என்பது தனிமுத்திரைப் பதித்தல் மற்றும் குழப்பமனநிலை கொண்ட காலமாகும்.

No comments:

Post a Comment