Sunday, 5 April 2026

விசையும் இயக்கமும் one liner

Force and Motion | Study Notes

அலகு 2: விசையும் இயக்கமும்

இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
ஓய்வும் இயக்கமும்
• தள்ளுதல் அல்லது இழுத்தல் நிகழ்வுகளின் காரணமாகவே இயக்கம் ஏற்படுகிறது. • ஓய்வுநிலை அல்லது இயக்கநிலை என்பது காண்பவரது நிலையைப் பொறுத்த சார்புடையவை ஆகும். • ஆரியபட்டா கூற்றுப்படி, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது.
விசை (Force)
• பொருட்களின் மீது உயிருள்ள அல்லது உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும் தள்ளுதல் அல்லது இழுத்தலே விசையாகும். • தொடுவிசை: பொருளினைத் தொடுவதன் மூலம் செயல்படுத்தப்படும் விசை. (எ.கா: கால்பந்தை உதைத்தல்) • தொடாவிசை: பொருளினைத் தொடாமல் செயல்படுத்தப்படும் விசை. (எ.கா: புவியீர்ப்பு விசை, காந்த விசை) • விசை ஒரு பொருளின் வேகம், திசை மற்றும் வடிவத்தை மாற்றவல்லது.
இயக்கத்தின் வகைகள்
• நேர்க்கோட்டு இயக்கம்: பொருளானது நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கும். (எ.கா: தானாகக் கீழே விழும் பொருள்) • வட்டப்பாதை இயக்கம்: ஒரு பொருள் வட்டப்பாதையில் இயங்குதல். (எ.கா: கடிகார முட்கள்) • தற்சுழற்சி இயக்கம்: ஒரு பொருள் அதன் அச்சினை மையமாகக் கொண்டு இயங்குதல். (எ.கா: பம்பரம்) • அலைவு இயக்கம்: ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு முன்னும் பின்னுமாக நகர்தல். (எ.கா: தனிஊசல்) • ஒழுங்கற்ற இயக்கம்: நிலையான பாதை இன்றி நகர்தல். (எ.கா: ஈயின் இயக்கம்)
வேகம் மற்றும் சராசரி வேகம்
• ஓரலகு காலத்தில் ஒரு பொருள் எவ்வளவு தூரம் கடந்தது என்பதே சராசரி வேகமாகும். • சராசரி வேகம் (S) = கடந்த தொலைவு (d) / எடுத்துக்கொண்ட காலம் (t). • வேகத்தின் SI அலகு: மீட்டர் / விநாடி (m/s). • தரையில் வாழும் விலங்குகளில் சிறுத்தையானது 112 கிமீ/மணி வேகத்தில் ஓடும் மிக வேகமான விலங்காகும். • சீரான இயக்கம்: குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும் இயக்கம்.
ரோபாட்டிக்ஸ் (Robotics)
• ரோபாட் என்ற சொல்லின் பொருள் 'உத்திரவுக்கு படிந்த ஊழியர்' என்பதாகும். • ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவு ரோபாட்டிக்ஸ் ஆகும். • மின்னணு உணர்விகள் ரோபாட்டுகளின் கண்களாகவும் காதுகளாகவும் உள்ளன. • செயற்கை நுண்ணறிவு என்பது மனித மூளை போன்று சிந்திக்கத்தக்க வகையில் கணினியை உருவாக்குவதாகும். • நானோ ரோபாட்டுகள் இரத்த ஓட்டத்தில் செலுத்தப்பட்டு கடினமான அறுவை சிகிச்சைகளைச் செய்யப் பயன்படும்.

No comments:

Post a Comment