7-ஆம் வகுப்பு அறிவியல் (மூன்றாம் பருவம்)
முழுமையான வினா-விடை வங்கி | Complete Q&A
💡 கார்டைத் தொட்டால் அந்தந்த மொழியில் (Tamil/English) தானாக வாசிக்கும்.
1. ஒளியியல் / Optics
தமிழ்
வினா: நிழல்கள் எப்போதும் கருமையாக இருப்பது ஏன்?
விடை: ஒளி ஊடுருவாத பொருட்கள் தன் வழியே ஒளியைச் செல்ல விடாமல் தடுத்து நிழலை உருவாக்குவதால் அவை கருமையாக உள்ளன.
English
Q: Why are shadows always black?
Ans: Opaque objects do not allow light to pass through them and create a dark area, hence shadows are black.
தமிழ்
வினா: கதிர் தொகுப்பு என்றால் என்ன?
விடை: பல ஒளிக்கதிர்களின் தொகுப்பு கதிர் தொகுப்பு எனப்படும்.
English
Q: What is a beam of light?
Ans: A collection of light rays is called a beam of light.
2. அண்டம் மற்றும் விண்வெளி / Universe & Space
தமிழ்
வினா: விண்மீன் மண்டலம் என்றால் என்ன?
விடை: வானத்தில் ஒரு குறிப்பிட்ட வடிவில் காணப்படும் விண்மீன்களின் தொகுப்பு விண்மீன் மண்டலம் எனப்படும்.
English
Q: What is a Constellation?
Ans: A group of stars forming a recognizable pattern in the sky is called a constellation.
தமிழ்
வினா: ஒளி ஆண்டு என்றால் என்ன?
விடை: ஒளியானது ஒரு வருடத்தில் வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு ஒளி ஆண்டு எனப்படும்.
English
Q: What is a Light Year?
Ans: A light year is the distance that light travels in a vacuum in one year.
3. பலபடி வேதியியல் / Polymer Chemistry
தமிழ்
வினா: பிளாஸ்டிக் உண்பவை என்றால் என்ன?
விடை: பிளாஸ்டிக்கைச் சிதைக்கக்கூடிய நுண்ணுயிரிகள் பிளாஸ்டிக் உண்பவை எனப்படும்.
English
Q: What are plastic eaters?
Ans: Micro-organisms that can break down or eat plastics are called plastic eaters.
4. அன்றாட வாழ்வில் வேதியியல் / Chemistry in Daily Life
தமிழ்
வினா: அனல்ஜிசிக் (வலி நிவாரணிகள்) என்றால் என்ன?
விடை: உடலில் ஏற்படும் வலியைப் போக்கப் பயன்படும் வேதிப்பொருட்கள் அனல்ஜிசிக் மருந்துகள் எனப்படும்.
English
Q: What are Analgesics?
Ans: Chemicals used to relieve pain in the body are called analgesics.
தமிழ்
வினா: ஆன்டாசிட் (அமில நீக்கிகள்) என்றால் என்ன?
விடை: வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கப் பயன்படும் பலவீனமான காரங்கள் அமில நீக்கிகள் எனப்படும்.
English
Q: What are Antacids?
Ans: Weak bases used to neutralize the excess acid produced in the stomach are called antacids.
5. அன்றாட வாழ்வில் விலங்குகள் / Animals in Daily Life
தமிழ்
வினா: பட்டுப் புழு வளர்ப்பு (Sericulture) என்றால் என்ன?
விடை: பட்டு நூல்களைப் பெறுவதற்காகப் பட்டுப் புழுக்களை வளர்க்கும் முறை செரிகல்ச்சர் எனப்படும்.
English
Q: What is Sericulture?
Ans: The rearing of silkworms for the production of silk is called sericulture.
6. காட்சித் தொடர்பு / Visual Communication
தமிழ்
வினா: ஸ்கராட்ச் (Scratch) மென்பொருளின் பயன் யாது?
விடை: இது அனிமேஷன் படங்கள், கதைகள் மற்றும் விளையாட்டுகளை எளிதாக உருவாக்கப் பயன்படுகிறது.
English
Q: What is the use of Scratch software?
Ans: It is used to easily create animations, stories, and interactive games.
No comments:
Post a Comment