Sunday, 12 April 2026

முகலாயப்பேரரசு - முக்கிய குறிப்புகள்

முகலாயப் பேரரசு: முக்கிய குறிப்புகள் - RSK
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST, காப்பரத்தாம்பட்டி

முகலாயப் பேரரசு - 50 முக்கிய குறிப்புகள் 👑

1. முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர் ஆவார்.
2. பாபர் கி.பி. 1526-ல் முதலாம் பானிபட் போரில் வெற்றி பெற்றார்.
3. இப்போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்தார்.
4. பாபர் முதன்முதலில் போரில் பீரங்கிகளைப் பயன்படுத்தினார்.
5. பாபரின் தந்தை உமர் ஷேக் மிர்சா ஆவார்.
6. பாபர் தனது சுயசரிதையை 'துசுக்-இ-பாபரி' என்ற பெயரில் எழுதினார்.
7. பாபருக்குப் பின் அவரது மகன் ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார்.
8. ஹுமாயூன் என்பதன் பொருள் 'அதிர்ஷ்டசாலி' என்பதாகும்.
9. சௌசா போர் (1539) மற்றும் கன்னோசி போரில் (1540) செர்ஷா ஹுமாயூனைத் தோற்கடித்தார்.
10. சூர் வம்சத்தை நிறுவியவர் செர்ஷா சூர் ஆவார்.
11. நவீன நாணய முறையின் தந்தை என்று செர்ஷா அழைக்கப்படுகிறார்.
12. செர்ஷா டெல்லியில் 'புரானா கிலா' கோட்டையைக் கட்டினார்.
13. ஹுமாயூன் நூலகப் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
14. முகலாய மன்னர்களில் மிகச்சிறந்தவர் அக்பர் ஆவார்.
15. அக்பர் 1556-ல் இரண்டாம் பானிபட் போரில் ஹெமுவைத் தோற்கடித்தார்.
16. அக்பரின் பாதுகாவலர் பைராம்கான் ஆவார்.
17. அக்பர் 'தீன்-இலாஹி' எனும் புதிய சமயத்தை உருவாக்கினார்.
18. அக்பர் 'ஜிசியா' வரியை நீக்கினார்.
19. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் ராஜா தோடர்மால் ஆவார்.
20. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் அக்பர்.
21. அக்பர் பதேப்பூர் சிக்ரியில் 'இபாதத் கானா' எனும் வழிபாட்டுத் தலத்தைக் கட்டினார்.
22. அக்பரின் அவையில் இருந்த புகழ்மிக்க இசைக்கலைஞர் தான்சேன்.
23. அக்பருக்குப் பின் ஜஹாங்கீர் (சலீம்) ஆட்சிக்கு வந்தார்.
24. ஜஹாங்கீர் என்பதன் பொருள் 'உலகைக் கைப்பற்றியவர்'.
25. ஜஹாங்கீர் நீதி வழங்க 'ஆராய்ச்சி மணி' முறையைக் கொண்டு வந்தார்.
26. ஜஹாங்கீர் காலத்தில் ஆங்கிலேயத் தூதர் சர் தாமஸ் ரோ இந்தியா வந்தார்.
27. ஜஹாங்கீரின் மனைவி மெகருன்னிசா 'நூர்ஜகான்' என்று அழைக்கப்பட்டார்.
28. ஜஹாங்கீருக்குப் பின் ஷாஜகான் ஆட்சிக்கு வந்தார்.
29. ஷாஜகான் என்பதன் பொருள் 'உலகின் அரசன்'.
30. ஷாஜகானின் காலம் 'முகலாயர்களின் பொற்காலம்' எனப்படுகிறது.
31. ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாகத் தாஜ்மஹால் கட்டினார்.
32. தாஜ்மஹால் யமுனை ஆற்றின் கரையில் ஆக்ராவில் உள்ளது.
33. டெல்லி செங்கோட்டை மற்றும் ஜும்மா மசூதியைக் கட்டியவர் ஷாஜகான்.
34. புகழ்மிக்க 'மயிலாசனம்' ஷாஜகான் காலத்தில் உருவாக்கப்பட்டது.
35. ஷாஜகானுக்குப் பின் அவரது மகன் ஔரங்கசீப் ஆட்சிக்கு வந்தார்.
36. ஔரங்கசீப் 'ஆலம்கீர்' (உலகை வெல்பவர்) என்ற பட்டம் சூட்டிக்கொண்டார்.
37. ஔரங்கசீப் ஜிசியா வரியை மீண்டும் விதித்தார்.
38. ஔரங்கசீப் சீக்கியர்களின் 9-வது குரு தேக் பகதூரைத் தூக்கிலிட்டார்.
39. ஔரங்கசீப் காலத்தில் மராட்டிய மன்னர் சிவாஜி எழுச்சி பெற்றார்.
40. ஔரங்கசீப் 'ஜிந்தா பிர்' (வாழும் துறவி) என்று அழைக்கப்பட்டார்.
41. முகலாயர்களின் அலுவலக மொழி பாரசீக மொழி ஆகும்.
42. செங்கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டது.
43. அக்பரின் வரலாற்றை விளக்கும் நூல் 'அக்பர் நாமா' (அபுல் பாசல்).
44. அக்பர் காலத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
45. முகலாயர் காலத்தில் நிலவரி 'ஜாப்தி' முறை எனப்பட்டது.
46. அக்பர் அவையில் இருந்த பீர்பால் அறிவுத்திறனுக்குப் பெயர் பெற்றவர்.
47. ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ உபநிடதங்களை மொழிபெயர்த்தார்.
48. ஆக்ராவிலுள்ள மோதி மசூதியைக் கட்டியவர் ஷாஜகான்.
49. முகலாயர் கட்டிடக்கலையில் பாரசீக மற்றும் இந்திய பாணிகள் கலந்திருந்தன.
50. கி.பி. 1707-ல் ஔரங்கசீப்பின் மறைவுக்குப் பின் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது.

No comments:

Post a Comment