Wednesday, 22 April 2026

8th SS பாடக்குறிப்புகள்

பொருளியல் & புவியியல் பாடக்குறிப்புகள்

பாடக்குறிப்புகள்: பொருளியல் & புவியியல்

"கற்றல் படைப்பாற்றலை ஏற்படுத்தும், படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டும். சிந்தனை அறிவாற்றலை அளிக்கும் அறிவாற்றல் உங்களை சிறந்தவராக்கும்"
- ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்

பகுதி 1: பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

  • பணத்தின் வரையறை: "பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது அதற்கான செலுத்துத் தொகையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய எதனையும் பணம் என்று கூறலாம்” - இராபர்ட்சன்.
  • சொற்பிறப்பியல்: பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான "மொனேட்டா ஜூனோ”விலிருந்து பெறப்பட்டது. இது ரோமின் பெண் கடவுள் ஆகும்.
  • ரூபாய்: இந்தியாவின் ரூபாய் என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான "ரூபியா" என்பதிலிருந்து பெறப்பட்டது (பொருள்: வெள்ளி நாணயம்).
  • நாணய வரலாறு: கி.மு. 8ஆம் நூற்றாண்டில் லிடியாவின் பேரரசர் மிடாஸ் உலோக நாணயத்தைக் கண்டுபிடித்தார்.
  • இந்திய நாணயங்கள்: கி.மு. 6 நூற்றாண்டில் மஹாஜனபதங்கள் காலத்தில் பூரணாஸ், கர்ஷபணம், பனாஸ் போன்றவை அச்சடிக்கப்பட்டன.
  • டெல்லி சுல்தான்: தங்கம், வெள்ளி, தாமிர நாணயங்கள் டாங்கா என்றும், மதிப்பு குறைந்தவை ஜிட்டால் என்றும் அழைக்கப்பட்டன.
  • செர்ஷா சூரி: 178 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார் (ரூபியா).
  • ஆங்கிலேயர் நாணயங்கள்: தங்கம் - கரோலினா, செம்பு - கப்ரூன், வெண்கலம் - டின்னி.
  • மின்வங்கி: தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம்.

பணத்தின் மதிப்பும் பணிகளும்

  • அக மதிப்பு: உள் நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளின் வாங்கும் சக்தி.
  • புற மதிப்பு: வெளி நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளை வாங்கும் சக்தி.
  • சர்ஜான் ஹிக்ஸ்: "பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது."
  • பேராசிரியர் வாக்கர்: "எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம்."
  • பணவீக்கம்: விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைதல்.
  • பணவாட்டம்: விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயருதல்.
  • பணமதிப்பிழப்பு: 2016 நவம்பர் 8-ல் ₹500, ₹1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

சட்டரீதியான நடைமுறைகள்

  • பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் - 2002
  • ஊழல் தடுப்புச் சட்டம் - 1988
  • லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்
  • பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் - 1988 (திருத்தம் 2016)
  • ரியல் எஸ்டேட் சட்டம் - 2016

குறிப்பு: இந்திய ரூபாய் குறியீட்டை (₹) வடிவமைத்தவர் உதயகுமார் (விழுப்புரம் மாவட்டம்). ஜூலை 15, 2010 அன்று அங்கீகரிக்கப்பட்டது.

பகுதி 2: புவிப்படங்களைக் கற்றறிதல் (அலகு 8)

  • சிறிய அளவை புவிப்படங்கள்: கண்டங்கள், நாடுகள் போன்ற பெரிய நிலப்பகுதிகளைக் காட்டப் பயன்படுகின்றன.
  • பெரிய அளவை புவிப்படங்கள்: வட்டம் அல்லது மாவட்டம் போன்ற சிறிய பகுதிகளைக் காட்டப் பயன்படுகின்றன.
  • வண்ணங்கள்: ஆழம் குறைந்த நீர்ப்பகுதி - வெளிர் நீலம்; ஆழமான நீர்ப்பகுதி - அடர் நீலம்.
  • காணிப் புவிப்படங்கள்: குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமை விவரங்களைக் காட்டும்.
  • கருத்துப்படங்கள்: வெப்பநிலை, மழைப்பரவல் போன்ற குறிப்பிட்ட கருப்பொருளுக்குத் தயாரிக்கப்படுபவை.
  • சம அளவுக்கோட்டுப் படங்கள் (Isoline): "ஐசோ" என்பது கிரேக்கச் சொல் (பொருள்: சமம்).
  • கெடஸ்ட்ரல் (Cadastral): ஃப்ரெஞ்ச் சொல்லான 'கெடஸ்டர்' என்பதிலிருந்து வந்தது. பொருள்: "பிராந்திய சொத்துகளின் பதிவேடு".

No comments:

Post a Comment