Wednesday, 8 April 2026

கல்வி உளவியல் அலகு4 குறிப்புகள்

Unit 4 - Psychosocial Development | Curieyasity Digital
UNIT 4: சமூக, மனவெழுச்சி மற்றும் ஒழுக்க வளர்ச்சி
இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி
சமூக வளர்ச்சி (Social Development)
• சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுவதே சமூக வளர்ச்சி ஆகும். • சமூக நெறிப்படுத்தும் செயல்முறை (Process of Socialisation) என்பது குழந்தைகளிடம் சமூகப்பண்புகளை ஏற்படுத்துவதாகும். • குழந்தை பிறக்கும்போது 'சமூகப் பண்பு' அற்றது. • குழவிப் பருவத்தில் குழந்தைகள் பிறரைப் பார்த்துப் பின்பற்றுகின்றனர் (Imitation). • பிள்ளைப்பருவம் 'கூட்டப்பருவம்' (Gang-Age) என்று அழைக்கப்படுகிறது.
எரிக்சனின் சமூக வளர்ச்சிப் படிநிலைகள்
படிநிலைசமூகத் தொடர்பாளர்கள்முக்கியப் பண்பு / சிக்கல்
1. குழவிப் பருவம் (0-1)தாய் / செவிலியர்நம்பிக்கை VS நம்பிக்கையின்மை
2. நடக்கும் பருவம் (2-3)பெற்றோர்தன்னாட்சி VS வெட்கம்
3. விளையாட்டுப் பருவம் (3-5)ஆரம்பக் குடும்பம்முயற்சி VS குற்ற உணர்வு
4. பள்ளிப் பருவம் (6-10)பள்ளி / அக்கம் பக்கம்உழைப்பு VS தாழ்வு மனப்பான்மை
5. குமரப்பருவம் (11-19)ஒப்பார் குழுதன்னடையாளம் VS குழப்பம்
மனவெழுச்சி வளர்ச்சி (Emotional Development)
• 'Emover' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து 'Emotion' உருவானது. • வாட்சன் கூற்றுப்படி 3 அடிப்படை மனவெழுச்சிகள்: சினம், அஞ்சல், அன்பு. • மனவெழுச்சி அறிதிறன் (Emotional Intelligence) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் டேனியல் கோல்மேன். • மடைமாற்றம் (Sublimation): மனவெழுச்சிகளை ஆக்கபூர்வமான கலை, இலக்கியப் பணிகளில் திருப்புதல்.
ஒழுக்க வளர்ச்சி (Moral Development)
• சமூக விழுமியங்களைத் தெரிந்து கொண்டு அதன்படி நடப்பதே 'ஒழுக்க வளர்ச்சி'. • பியாஜேயின் ஒழுக்க வளர்ச்சி நிலைகள்: 1. கட்டாய நிலை, 2. தன்னாட்சி நிலை. • கோல்பர்க் (Kohlberg) ஒழுக்க வளர்ச்சியை 3 நிலைகளாகவும் 6 படிநிலைகளாகவும் பிரித்தார். • சுயக் கருத்து (Self-concept) என்ற சொல்லை முதலில் அறிமுகப்படுத்தியவர் 'லெவிஸ்கி'.

No comments:

Post a Comment