8-ஆம் வகுப்பு தமிழ் - இயல் 6
TET ஆசிரியர் தகுதித் தேர்வு - விரிவான குறிப்புகள்
பாடக் குறிப்புகள் (Study Notes)
- புணர்ச்சி இலக்கணம்: நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைவது புணர்ச்சி. இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என இருவகைப்படும்.
- விகாரப் புணர்ச்சி வகைகள்: தோன்றல் (புதிய எழுத்து வருதல்), திரிதல் (எழுத்து மாறுதல்), கெடுதல் (எழுத்து மறைதல்).
- சேர மன்னர்கள்: சேரர்களின் நாடு 'குடநாடு' எனப்பட்டது. இவர்களின் அடையாளப் பூ 'பனம்பூ'.
- கொங்கு மண்டலம்: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், சேலம் ஆகிய பகுதிகள் கொங்கு மண்டலம் எனப்படும்.
- ஊர் சிறப்புப் பெயர்கள்:
• தூத்துக்குடி - முத்து நகரம்
• சிவகாசி - குட்டி ஜப்பான்
• மதுரை - தூங்கா நகரம்
• திண்டுக்கல் - பூட்டு நகரம் / தமிழ்நாட்டின் ஹாலந்து
• திருப்பூர் - பின்னலாடை நகரம் - தொழில்கள்: கொங்கு நாட்டின் முதன்மையான தொழில் உழவு. அதைத் தொடர்ந்து கால்நடை வளர்ப்பு மற்றும் நெசவுத் தொழில் சிறந்து விளங்கின.
- ஆய்த எழுத்து: இது சொல்லின் இடையில் மட்டுமே வரும். இதற்கு 'தனிநிலை', 'முப்புள்ளி' என்ற பெயர்களும் உண்டு.
- குறுக்கங்கள்: நான்கு வகைப்படும். இவை மாத்திரை அளவில் குறைந்து ஒலிப்பவை.
No comments:
Post a Comment