உளவியல் முக்கியக் குறிப்புகள் (Psychology Notes)
அலகு 5: கற்றல் (Learning)
கற்றல் - அடிப்படைக்கருத்துகள்
- பயிற்சி மற்றும் முந்தைய அனுபவம் அடிப்படையில் உண்டாகும் "நடத்தை மாற்றம்" கற்றல் ஆகும்.
- கற்றல் வீதம் (Learning Rate) = கற்றல் தேர்ச்சியின் அளவு / கற்பதற்கு எடுத்துக்கொண்ட நேரம்.
கற்றல் வளைகோடு (Learning Curve)
- கற்றலில் ஏற்ற இறக்கங்கள் அமையும்போது S அமைப்பு கொண்ட வளைகோடு கிடைக்கும்.
- தேக்கநிலை (Plateau): ஆர்வமின்மை, தவறான கற்றல் முறை, சோர்வு போன்றவற்றால் கற்றலில் முன்னேற்றம் இல்லாத நிலை.
முக்கிய கற்றல் கோட்பாடுகள் (Learning Theories)
| அறிஞர் | கோட்பாடு | பரிசோதனை |
|---|---|---|
| தார்ண்டைக் (Thorndike) | முயன்று தவறிக் கற்றல் / இணைப்புக்கோட்பாடு | பூனை - சிக்கல் அறை பரிசோதனை |
| பாவ்லோவ் (Pavlov) | ஆக்கநிலையிறுத்தம் (Classical Conditioning) | நாய் - உமிழ்நீர் சுரத்தல் |
| ஸ்கின்னர் (Skinner) | செயல்படு ஆக்கநிலையிறுத்தம் (Operant Conditioning) | எலி மற்றும் பெட்டி |
| கோஹ்லர் (Kohler) | உட்காட்சி வழிக்கற்றல் (Insight learning) / முழுமைக்காட்சி | சுல்தான் என்ற மனிதக்குரங்கு |
- தார்ண்டைக் கற்றல் விதிகள் (3): ஆயத்த விதி, பயிற்சி விதி, விளைவு விதி.
- "விளைவு விதி"யே எல்லா வகைக் கற்றலுக்கும் அடிப்படை என நம்பியவர் தார்ண்டைக்.
நினைவும் மறதியும் (Memory & Forgetting)
- நினைவின் வகைகள் (3): புலனறி நினைவு (1-3 sec), குறுகிய கால நினைவு (STM: 5-30 sec), நீண்ட கால நினைவு (LTM).
- கற்றதை மனதில் இருத்தி வைப்பதற்கான காரணம் "மனச்சுவடுகள்".
- நாம் எவற்றை மறக்க விரும்புகிறோமோ அவற்றையே மறக்கிறோம் என்று கூறியவர் சிக்மண்ட் ப்ராய்டு.
- மறத்தல் வளைகோட்டினை விளக்கியவர்: எபிங்காஸ்.
- கற்பதற்கான சிறந்த முறை: SQ3R (Survey, Questioning, Recite, Repeat, Review).
அலகு 6: நுண்ணறிவு மற்றும் ஆக்கத்திறன் (Intelligence & Creativity)
நுண்ணறிவு (Intelligence) - வரையறை மற்றும் கோட்பாடுகள்
- சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடத்தையை பொருத்தப்பாடுடையதாக மாற்றிக் கொள்ளும் திறன் நுண்ணறிவு ஆகும்.
| கோட்பாடு (Theory) | உருவாக்கியவர் |
|---|---|
| ஒற்றைக்காரணி கோட்பாடு (Single Factor) | ஆல்பிரட் பீனே |
| இரட்டைக் காரணிக்கோட்பாடு (Two Factor) | ஸ்பியர்மேன் (G-Factor & S-Factor) |
| பல்காரணி கோட்பாடு (Multi-factor) | தார்ண்டைக் |
| குழுக்காரணிக் கொள்கை (Group Factor) | தர்ஸ்டன் (7 அடிப்படைத் திறன்கள்) |
| நுண்ணறிவுக் கட்டமைப்புக் கோட்பாடு (Structure of Intellect) | கில்போர்ட் (120 கூறுகள்) |
| பல்வகை நுண்ணறிவுக்கோட்பாடு (Multiple Intelligence) | ஹொவர்டு கார்டனர் (8 வகைகள்) |
நுண்ணறிவு ஈவு (I.Q - Intelligence Quotient)
- சூத்திரம்: I.Q. = (மனவயது / கால வயது) × 100.
- I.Q -ஐ கண்டறிந்தவர்: வில்லியம் டெர்மன் (1916).
- "மனவயது" என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்: ஸ்டெர்ன் (1908).
- I.Q. 100 இருந்தால் அது சாதாரண/சராசரி நுண்ணறிவு ஆகும்.
- நுண்ணறிவு வளர்ச்சி முதிர்வு பெறும் வயது: 16.
ஆக்கத்திறன் (Creativity)
- ஆக்கத்திறன் என்பது விரிசிந்தனையோடு (Divergent Thinking) தொடர்புடையது.
- ஆக்கச் சிந்தனையின் படிநிலைகள் (கிரகாம் வாலிஸ்): 1. ஆயத்தம், 2. உள் வளர்ச்சி, 3. உள்ளொளி தோன்றுதல், 4. சரிபார்த்தல்.
- குவிசிந்தனை (Convergent Thinking): குறிப்பிட்ட தூண்டலுக்கான துலங்கள் யாவும் ஒரே இலக்கினை அடையும்படி சிந்தனை அமைதல். நுண்ணறிவுக்கு அடிப்படையாக அமைவது குவிசிந்தனை.
No comments:
Post a Comment