Thursday, 2 April 2026

இலக்கணம் வகைகள் -2

தமிழ் இலக்கணம் - பகுதி 2

தமிழ் இலக்கண வகைகள்

பகுதி 2 (101 - 190)

இரா.செந்தில்குமார், B.T.ASST., காப்பரத்தாம்பட்டி

இலக்கணக் குறிப்புகள் (தொடர்ச்சி)

101. பால் வகைகள் - 5 (ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்). 102. உயர்திணை பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால். 103. அஃறிணை பால் - ஒன்றன்பால், பலவின்பால். 104. வழக்கு வகைகள் - 2 (இயல்பு, தகுதி). 105. இயல்பு வழக்கு - இலக்கணமுடையது, இலக்கணப்பலி, மரூஉ. 106. தகுதி வழக்கு - இடக்கரடக்கல், குழூஉக்குறி, மங்கலம். 107. அ, இ சுட்டெழுத்துகளுக்குப் பின் வல்லினம் மிகும். (அச்சட்டை). 108. அந்த, இந்த சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும். (அந்தப்பக்கம்). 109. எந்த வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும். (எந்தத்திசை). 110. இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ' வரும்போது வல்லினம் மிகும். (தலையைக்காட்டு). 111. நான்காம் வேற்றுமை உருபு 'கு' வரும்போது வல்லினம் மிகும். (எனக்குத்தெரியும்). 112. அகர, இகர, உகர ஈற்று வினையெச்சங்களில் வல்லினம் மிகும். 113. இகரத்தில் முடியும் வினையெச்சங்களில் வல்லினம் மிகும். (எழுதிப்பார்த்தாள்). 114. வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களில் வல்லினம் மிகும். (படித்துப்பார்த்தார்). 115. 'ஆய்' வினையெச்சங்களுக்குப் பின் வல்லினம் மிகும். (படிப்பதாய்ச்சொன்னாள்). 116. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும். (செல்லாக்காசு). 117. உவமைத்தொகையில் வல்லினம் மிகும். (மலர்ப்பாதம்). 118. உருவகத்தில் வல்லினம் மிகும். (தமிழ்த்தாய்). 119. எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகியவற்றில் வல்லினம் மிகும். (எட்டுப்புத்தகம்). 120. அப்படி, இப்படி, எப்படி அடுத்து வல்லினம் மிகும். (அப்படிச்செய்). 121. திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும். (கிழக்குக்கடல்). 122. மகர மெய்யில் முடியும் சொல்லுக்குப் பின் வல்லினம் மிகும். (மரச்சட்டம்). 123. என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும். (எனக்கேட்டார்). 124. அதற்கு, இதற்கு, எதற்கு அடுத்து வல்லினம் மிகும். (அதற்குச்சொன்னேன்). 125. இனி, தனி ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகும். (இனிக்காண்போம்). 126. மிக என்னும் சொல்லின் பின் வல்லினம் மிகும். (மிகப்பெரியவர்). 127. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். (தீப்பிடித்தது). 128. வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக வரும்போது வல்லினம் மிகும். 129. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். (புலித்தோல்). 130. இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (மல்லிகைப்பூ). 131. சால, தவ, தட, குழ உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும். (சாலப்பேசினார்). 132. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது. (தம்பி படித்தான்). 133. அது, இது, எது அடுத்து வல்லினம் மிகாது. (அது சென்றது). 134. எது, எவை வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது. (எது கிடைத்தது?). 135. பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் அடுத்து வல்லினம் மிகாது. (எழுதிய பாடல்). 136. இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது. (இலை பறித்தேன்). 137. மென்தொடர், இடைத்தொடர் குற்றியலுகர வினையெச்சங்களில் வல்லினம் மிகாது. 138. வினைத்தொகையில் வல்லினம் மிகாது. (எழுதுபொருள்). 139. படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது. 140. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது. (தாய்தந்தை). 141. மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது. 142. விளித் தொடர்களில் வல்லினம் மிகாது. (தந்தையே பாருங்கள்). 143. படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது. (வரும்படி சொன்னார்). 144. வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது. (வாழ்க தமிழ்). 145. பிற எண்ணுப் பெயர்களுடன் வல்லினம் மிகாது. (ஒரு புத்தகம்). 146. அன்று, இன்று, என்று ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. (அன்று சொன்னார்). 147. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது. 148. மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது. 149. இரண்டாம் முதல் ஐந்தாம் வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது. 150. ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது. (உறு பொருள்). 151. அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது. (சலசல). 152. கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது. 153. தொகைநிலைத் தொடர்கள் - சொற்களுக்கு இடையே உருபுகள் மறைந்து வருவது. 154. தொகைநிலைத் தொடர்கள் வகைகள் - 6 (வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி). 155. தொகாநிலைத் தொடர்கள் வகைகள் - 9 (எழுவாய், விளி, வினைமுற்று, பெயரெச்சம் போன்றவை). 156. குறுக்கங்கள் வகைகள் - 4 (ஐகாரம், ஔகாரம், மகரம், ஆய்தம்). 157. புணர்ச்சி வகைகள் - 2 (இயல்பு, விகாரம்). 158. இயல்பு புணர்ச்சி - மாற்றமின்றிப் புணர்வது. (வாழை + மரம் = வாழைமரம்). 159. விகாரப் புணர்ச்சி - மாற்றம் நிகழ்வது. 160. விகாரப் புணர்ச்சி வகைகள் - 3 (தோன்றல், திரிதல், கெடுதல்). 161. தோன்றல் - புதிய எழுத்து தோன்றுவது. (நுழைவு + தேர்வு = நுழைவுத்தேர்வு). 162. திரிதல் - எழுத்து மாறுவது. (பல் + பசை = பற்பசை). 163. கெடுதல் - எழுத்து மறைவது. (புறம் + நானூறு = புறநானூறு). 164. தளை வகைகள் - 7. 165. அடி வகைகள் - 5 (குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி). 166. குறளடி - இருசீர்களைப் பெற்று வருவது. 167. சிந்தடி - முச்சீர்களைப் பெற்று வருவது. 168. அளவடி - நான்கு சீர்களைப் பெற்று வருவது. 169. நெடிலடி - ஐந்து சீர்களைப் பெற்று வருவது. 170. கழிநெடிலடி - ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைப் பெற்று வருவது. 171. தொடை வகைகள் - 8 (மோனை, எதுகை, முரண், இயைபு போன்றவை). 172. அசை வகைகள் - 2 (நேரசை, நிரையசை). 173. சீர் வகைகள் - 4 (ஓரசை, ஈரசை, மூவசை, நாலசை). 174. பொருள்கோள் வகைகள் - 8. 175. வினா வகைகள் - 6. 176. விடை வகைகள் - 8. 177. சொல் இலக்கணம் - 2 வகைப்படும். 178. இலக்கண வகை சொற்கள் - 4 (பெயர், வினை, இடை, உரி). 179. இலக்கிய வகை சொற்கள் - 4 (இயல், திரி, திசை, வடசொல்). 180. வழக்கு வகைகள் - 2. 181. இயல்பு வழக்கு - 3. 182. தகுதி வழக்கு - 3. 183. வெண்பா வகைகள் - 6. 184. ஆசிரியப்பாவின் வகைகள் - 4. 185. தொழிற்பெயர் வகைகள் - 4. 186. வினைமுற்று வகைகள் - 2. 187. பெயரெச்சம் வகைகள் - 2. 188. வினையெச்சம் வகைகள் - 2. 189. பெயர்ச்சொற்கள் வகைகள் - 6. 190. வேற்றுமை வகைகள் - 8 (எழுவாய் முதல் விளி வேற்றுமை வரை).

No comments:

Post a Comment